உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

புதுச்சத்திரம்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவிகள் பரங்கிப்பேட்டையில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த மாணவிகள் சேந்திரக்கிள்ளை பகுதியில் உள்ள, விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சி அளித்தனர்.இயற்கை முறையில் விவசாயம் செய்வது, அதனால் ஏற்படும் பயன், பஞ்ச காவியம் தயாரிப்பது குறித்து விளக்கமளித்தனர். விவசாய சங்க கோதண்டராமன், தனகோபால், கோதண்டராமன், ஜெயராமன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் உடனிருந்தனர். மாணவி மாலினி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை