உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

புவனகிரி: புவனகிரி வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுதும் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.புவனகிரி வட்டாரத்தில் தொடக்க மற்றும் நடுநிலை ஆசிரியர்களுக்கு, மூன்றாம் பருவத்திற்கான சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. புவனகிரி அரசுப்பள்ளியில் நடந்த முகாமில், வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருள்சங்கு வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் லட்சுமி, செல்வி முன்னிலை வகித்தனர். வடலுார் ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர் நல்லமுத்து, கருத்தாளர்கள் ஜெரினாபேகம், சுகந்தி, உமா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி