ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
புவனகிரி: புவனகிரி வட்டார துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது. புவனகிரி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சி முகாமில், வட்டார கல்வி அலுவலர்கள் கலைச்செல்வி, செல்வம், மேற்பார்வையாளர் அருள்சங்கு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பயிற்றுனர்கள் சக்திவேல், ஜானகிராமன், கீதா ஆகியோர் பயிற்சி அளித்தனர். பேராசிரியர் நல்லமுத்து முகாமை துவக்கி வைத்து ஆலோசனை வழங்கினார்.