உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு

விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த அக்கடவல்லியில் அட்மா திட்டத்தின் கீழ் ரசாயன உரங்களை குறைப்பது பற்றிய விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. உதவி இயக்குனர் சுரேஷ் தலைமை தாங்கினார். முதல்வரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரம், பயிர்கள் நன்மைகள் குறித்து துணை இயக்குனர் அமிர்தராஜ் பேசினார். பரிசோதனைக்கு மண் மாதிரி, பாசன நீர் எடுக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் அலுவலர் மாலினி விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி