உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் பெற்றோருக்கான பயிற்சி வகுப்பு

மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் பெற்றோருக்கான பயிற்சி வகுப்பு

விருத்தாசலம் : கல்வி அறிவு மட்டுமே சிறந்த மாணவர்களை உருவாக்காது என நடிகர் தாமு பேசினார்.விருத்தாசலம் மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், 'குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்களின் கலை' என்ற தலைப்பில் பெற்றோர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. பள்ளி தாளாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் நடிகர் தாமு பேசுகையில், 'பெற்றோர்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் மாணவர்கள் வளர்கிறார்கள். உங்கள் குழந்தைகளாக இருந்தாலும் அவர்கள் ஆசிரியகளின் மாணவர்கள்.குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேச கூடாது. குழந்தைகளை அதிகாலை 5:00 மணிக்கு எழுந்து படிக்க பழக்கப்படுத்துங்கள். மாலையில் விளையாட வாய்ப்பு கொடுங்கள். கல்வி அறிவு மட்டுமே சிறந்த மாணவனை உருவாக்கி விடாது.கலை, விளையாட்டு சிறந்த மாணவர்களை அடையாளம் காட்டும். பள்ளிகள் கல்வி, கலை, விளையாட்டு போன்ற அனைத்திலிலும் குழந்தைகளை சாதனையாளர்களாக உருவாக்குகிறது' என்றார். விழாவில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ