மேலும் செய்திகள்
கன மழையால் ரயில்கள் 30 நிமிடம் தாமதம்
01-Dec-2024
கடலுார் கடலுார் வழியாக இயக்கப்படும் ரயில்கள் மழை காரணமாக தாமதமாக வந்து சேர்ந்தது.பெஞ்சல் புயல் மற்றும் கன மழை காரணமாக கடலுார் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுார் மாவட்டத்தில் இருந்து சென்னை செல்லும் பஸ்கள் இயக்கப்படாமல் அந்தந்த பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன.கடலுார் வழியாக இயக்கப்படும் சென்னை - திருச்செந்துார் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும், பயணிகள் ரயிலும் 30 நிமிடம் முதல் ஒரு மணிநேரம் வரை கடலுாருக்கு தாமதமாக வந்து சேர்ந்தன.
01-Dec-2024