உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆட்டம் போட்ட தனிப்பிரிவு ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்

ஆட்டம் போட்ட தனிப்பிரிவு ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்

கடலுார் மாவட்டத்தின் கடைக்கோடி சப்டிவிஷனுக்குட்பட்ட ஒரு போலீஸ்நிலையத்தில் சில மாதங்களுக்கு முன் தனிப்பிரிவு ஏட்டு ஒருவர் நியமிக்கப்பட்டார். இவர் கடந்த வாரத்தில் போதையில், காரில் சென்ற ஒருவரிடம் வம்பு செய்துள்ளார். அந்த கார் உரிமையாளர், அருகிலிருந்த உறவினர்களுக்கு போன் செய்து அழைக்கவே அவர்கள் வருவதற்குள் ஏட்டு அங்கிருந்த எஸ்கேப் ஆகியுள்ளார். சம்பந்தபட்ட போலீஸ் ஸ்டேஷன் சப்இன்ஸ்பெக்டரிடம், காரில் வந்தவரின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். உடனடியாக களத்தில் இறங்கிய சப் இன்ஸ்பெக்டர், தனிப்பிரிவு ஏட்டுவிடம் இதுகுறித்து விசாரித்துள்ளார். இதனால் அப்செட்டான ஏட்டு, நான் யார் தெரியுமா.. என சப் இன்ஸ்பெக்டரிடமே வாய்த்தகராறில் ஈடுபட்டார். இச்சம்பவம் குறித்த தகவல் மாவட்ட தலைமை அதிகாரிக்கு சென்றதும், சம்பந்தப்பட்ட ஏட்டை ஆயுதப்படைக்கு மாற்றினார். ஆனால் அந்த ஏட்டுவோ மெடிக்கல் லீவில்சென்றுவிட்டாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ