மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி
05-Jun-2025
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் வீசிய சூறாவளி காற்றில் அரச மரம் முறிந்து விழுந்ததில் வீடு இடிந்து சேதமானது. ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் நேற்று மாலை இடி மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் திடீரென மழை பெய்தது. அப்போது வியாசராயர் மடத்து தெருவில் தங்கமணி என்பவரின் வீட்டின் அருகில் இருந்த அரசமரம் முறிந்து அவரது வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டிற்குள் இருந்த தங்கமணி உறவினர் கீர்த்திவாசன் என்பவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடன் அவர்கள், கீர்த்திவாசனை மீட்டு ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.வீட்டிற்குள் இருந்த அத்தியாவசிய பொருட்கள், சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் சேதமானது. தகவலறிந்த ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, வீட்டின் மீது விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர். வீடு இழந்த குடும்பத்தினருக்கு பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன், வார்டு கவுன்சிலர் சதீஷ்குமார் ஆறுதல் கூறினர்.
05-Jun-2025