போலீஸ் நிலையத்தின் மீது சாய்ந்த மரம்
சிதம்பரம்: போலீஸ் ஸ்டேஷனில் புளியமரம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காட்டுமன்னார்கோவில் போலீஸ் ஸ்டேஷன் அருகில் பழமையான புளிய மரம் இருந்தது. நேற்று பெய்த கனமழையால் மரம் வேரோடு சாய்ந்து போலீஸ் ஸ்டேஷனின் மதிற்சுவர் மீது விழுந்தது.இதில், போலீஸ் ஸ்டேஷன் பெயர் பலகை, இரும்பு கதவு, மதிற்சுவர் சேதமடைந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் ொதுப்பணித்துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.