உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மரக்கன்று நடும் விழா: எம்.எல்.ஏ., பங்கேற்பு

மரக்கன்று நடும் விழா: எம்.எல்.ஏ., பங்கேற்பு

பண்ருட்டி: பெரியபுறங்கனி ஊராட்சியில் முதல்வரின் பிறந்த நாள் விழா முன்னிட்டு எம்.எல்.ஏ., மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைத்தார். முதல்வர் ஸ்டாலின் 72வது பிறந்த நாள் விழாவையொட்டி, பண்ருட்டி அடுத்த பெரியபுறங்கனி ஊராட்சியில் மரக்கன்றுகள் நடுதல் விழா மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடந்தது. சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, கட்சிக் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கினார். விழாவில், முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை