மேலும் செய்திகள்
மரக்கன்றுகளை நட்டு பசுமையை காக்கும் அறக்கட்டளை
05-Jan-2026
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு சோழபுரம் தேசிய நெடுஞ்சாலை பிரிவு பட்டேல் குழுமம், நகாய் அதிகாரிகள், ரோட்டரி சங்கம் இணைந்து மரக்கன்று நடுதல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பட்டேல் குழும முதுநிலை மேலாளர் சிங்காரவேல் தலைமை தாங்கினார். திட்ட மேலாளர் ஷானாவாஸ்கான், உதவி மேலாளர் விக்னேஸ்வரன், ரோட்டரி சங்க ஆளுநர் முருகேசன், தலைவர் சிவராமன் முன்னிலை வகித்தனர். மண்டல செயலாளர் மகாராஜன் வரவேற்றார். பின்னலுாரில் வி.கே.டி சாலை பாலம் அருகே 500க்கும் மேற்பட்ட மரங்கன்றுகள் நடப்பட்டது. மேலும் சாலை பாதுகாப்பு விழப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாகன முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி, துண்டு பிரசுங்கள் வழங்கினர்.
05-Jan-2026