உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மரக்கன்று நடும் போராட்டம்; நடுவீரப்பட்டில் 125 பேர் கைது

மரக்கன்று நடும் போராட்டம்; நடுவீரப்பட்டில் 125 பேர் கைது

நடுவீரப்பட்டு; கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அடுத்த மலையடிக்குப்பத்தில் அரசுக்கு சொந்தமான தீர்வை ஏற்படாத 165 புஞ்சை தரிசு நிலத்தை ஆக்கிரமித்து நடப்பட்டிருந்த முந்திரி, வாழை மரங்களை வருவாய்த் துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் ஜன., 29ல் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் சண்முகம் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி உட்பட கிராம மக்கள், மலையடிக்குப்பம் பகுதியில் அதிகாரிகள் அகற்றிய முந்திரி மரங்கள் இருந்த அதே இடத்தில் மீண்டும் முந்திரி கன்றுகளை நடும் போராட்டத்தில் ஈடுபட வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டக் குழுவினரிடம் எஸ்.பி., ஜெயக்குமார், முந்திரி மரக்கன்றுகளை நடக்கூடாது எனக் கூறினார். அதற்கு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.பின், தடையை மீறி, முந்திரிக் கன்றுகளை நட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் சண்முகம், 40 பெண்கள் உள்ளிட்ட 125 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி