மேலும் செய்திகள்
தி.மு.க., செயற்குழுவில் இருதரப்பு வாக்குவாதம்
28-May-2025
திட்டக்குடி :ரெட்டிச்சாவடி அருகே துாங்கிக் கொண்டிருந்த நபரின் மீது கல்லைப் போட்டுக்கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.கடலுா் மாவட்டம், கடலுார் அடுத்த சின்ன கங்கணாங்குப்பத்தில் தனியார் பேட்டரி கடை முன்பு, கடந்த 2ம் தேதி 40 வயது நபர் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தார். ரெட்டிச்சாவடி போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் கொலை என்பதை உறுதி செய்தனர். கொலை செய்த நபரை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் உள்ள 'சிசிடிவி' யில் பதிவான காட்சிகள் அடிப்படையில் தனிப்படை போலீசார் நேற்று திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த மணிவண்ணன்,47, என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.இதில், மணிவண்ணன் மீது ஒரு கொலை வழக்கு உட்பட ஏழு வழக்குகள் உள்ளன. இதனால் அவரது குடும்பத்தினர் பிரிந்து சென்றதால் மன வேதனையில் கடந்த மூன்று ஆண்டுகளாக கடலுார் பகுதியில் தங்கி, கூலி வேலை செய்தார். கொலை சம்பவம் நடந்த போது, இறந்த நபர் மணிவண்ணனின் செல்போன், பணத்தை திருட முயன்றதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மணிவண்ணன், மர்ம நபரை கல்லால் தாக்கி கொலை செய்தது தெரிந்தது. உடன், போலீசார், மணிவண்ணணை கைது செய்து, இறந்த நபரை பற்றி விசாரித்து வருகின்றனர்.
28-May-2025