மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாட்டம்
28-Mar-2025
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த சக்திவிளாகம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா, மாணவர் சேர்க்கை, பள்ளி ஆண்டு விழா என, முப்பெரும் விழா நடந்தது.தலைமை ஆசிரியர் நித்யானந்தம் தலைமை தாங்கினார். கீரப்பாளையம் வட்டார வள மேற்பார்வை யாளர் ராஜசேகர், ஆசிரியர் பயிற்றுநர் தசோதரன், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் சுரேஷ், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர் வட்டார கல்வி அலுவலர் மணிவாசகன் பெற்றோர்களிடம் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்து படிக்கு வைக்குமாறு பேசினார். விழாவில், மாணவர்களின் பெற்றோர்கள் அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கினர்.ஆசிரியர் கோமதி நன்றி கூறினார்.
28-Mar-2025