மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
16-Aug-2025
நெய்வேலி: நெய்வேலி அடுத்த குடியிருப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடத்திற்கான பூமி பூஜை, ஆசிரியர் தினம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களை கவுரவித்தல் என முப்பெரும் விழா நடந்தது. சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, 1 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடத்திற்கு பூமி பூஜையை துவக்கி வைத்தார். தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கினார். விழாவில், எஸ்.டி.ஓ., சபிதா, டி.இ.ஓ., துரைப்பாண்டியன், தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாவட்ட பிரதிநிதி ஜெகநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஞானசேகர், சிவமணி, சிவமுருகன், பாபு, அன்பழகன், கலிவரதன், குணசேகரன், ராஜசேகர், அருள்ஜோதி, ரமேஷ், தங்கவேல், சிகாமணி, கோபால், கனகவேல், ஜானகிராமன், ரங்கநாதன், வெங்கடேசன், தகவல் தொழில்நுட்ப பணி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
16-Aug-2025