மேலும் செய்திகள்
தி.மு.க., மாவட்ட பிரதிநிதி அமைச்சரிடம் வாழ்த்து
16-Jan-2025
கடலுார்; தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, கடலுார் துறைமுகம் மற்றும் ராசாப்பேட்டை கிராமத்தில் த.வெ.க., பொதுச்செயலாளர் ஆனந்த், தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர், கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் அறிவுறுத்தலின்படி, பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.கடலுார் கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்யராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வல்லவி பங்கேற்று இனிப்பு வழங்கினர். கடலுார் துறைமுகம் பகுதி செயலாளர் புருஷோத் மற்றும் ராசாப்பேட்டை நிர்வாகிகள் உடனிருந்தனர். அதேபோல் வடலுார் நகரத்தில் மாவட்ட துணை செயலாளர் ஜெயவேல் தலைமையில், நகர தலைமை நிர்வாகிகள் அலாவுதீன், சூர்யா, ராஜி, இளமாறன், சுரேஷ் மாரிமுத்து, மிஷால், முத்தரசு மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். வசந்தம் சிறப்பு பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது.
16-Jan-2025