ஊர்தி ஓட்டுனர்கள் சங்க கூட்டம்
கடலுார்: கடலுாரில் தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் கார்மேகம், அந்தோணிராஜா, ஞானசேகரன், ரவிச்சந்திரன், ரமேஷ், பழனிச்சாமி, அப்பாசாமி, தேவதாஸ், வின்சென்ட் ராஜன், சங்குபாலன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஊதிய முரண்பாடு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன, உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.