உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாரிகள் நேருக்கு நேர் மோதல் : 1 மணி நேரம் டிராபிக் ஜாம்

லாரிகள் நேருக்கு நேர் மோதல் : 1 மணி நேரம் டிராபிக் ஜாம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பெட்ரோல் டேங்கர் மீது அரிசி லோடு லாரி மோதியதில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.கடலுாரில் இருந்து விருத்தாசலம்-வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு அரிசி லோடு ஏற்றிய லாரி (டி.என்.30 - ஏ.ெஹச்.2799) சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. சேலம் மாவட்டம், தடாகம்பட்டி நாச்சிமுத்து, 62; லாரியை ஓட்டினார். தொரவளூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் லாரி வந்த போது, தருமபுரியில் இருந்து குமராட்சிக்கு பெட்ரோல், டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில், நாச்சிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார். விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து, இடிபாடுகளில் சிக்கிய டேங்கர் லாரி டிரைவர், வேப்பூர் அடுத்த நல்லுார் ராமச்சந்திரன்,60; என்பவரை பத்திரமாக மீட்டனர்.பெட்ரோல் டேங்கரில் இருந்து கசிவு ஏற்பட்டதை தீயணைப்பு வீரர்கள் சரி செய்தனர். விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். விபத்து காரணமாக விருத்தாசலம்-வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ