உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஹான்ஸ் விற்ற இருவர் கைது

ஹான்ஸ் விற்ற இருவர் கைது

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே ஹான்ஸ் விற்ற பெட்டிக்கடை உரிமையாளர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று கார்மாங்குடி, டி.பவழங்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, டி.பவழங்குடியைச் சேர்ந்த சரத்குமார், 28; கார்மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன், 52, ஆகியோர் தங்களது பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, சரத்குமார், சுப்ரமணியன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ