மேலும் செய்திகள்
டாஸ்மாக் மதுபாட்டில் கடத்திய இருவர் கைது
18-Jan-2025
மணல் கடத்தல் வேன் பறிமுதல்
12-Jan-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் பூந்தோட்டம் பரமசிவம் மகன் வினோத்குமார், 35, ராமச்சந்திரன்பேட்டை கலியபெருமாள் மகன் பழனிவேல், 55. இருவரும் பசுமாடுகள் வளர்த்து வருகின்றனர். இருவரது மாடுகளும் கடந்த 17 ம் தேதி இரவு வீட்டருகே கட்டியிருந்த மாடுகளை காணவில்லை என புகார் கொடுத்தனர்.டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு உள்ளிட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வேப்பூர் சாலையில் சென்ற டாடா ஏஸ் வேனை நிறுத்தி விசாரித்தனர்.அதில், அவர்கள், விருத்தாசலம் சேலம் மெயின்ரோட்டில் வசிக்கும் மூர்த்தி மகன் பிரசாந்த், 33, ராமசாமி மகன் மாரிமுத்து என்பதும், மாடுகளை டாடா ஏஸ் வேனில் கடத்திச் சென்றதும் தெரிந்தது. விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர். டாடா ஏஸ் வேனை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
18-Jan-2025
12-Jan-2025