உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலீசாரிடம் கத்தியைக்காட்டி மிரட்டிய இரண்டு பேர் கைது

போலீசாரிடம் கத்தியைக்காட்டி மிரட்டிய இரண்டு பேர் கைது

கடலுார்; கடலுார் அருகே போலீசாரை கத்தியைக்காட்டி மிரட்டிய இரண்டுபேரை துாக்கணாம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.கடலுார் அடுத்த துாக்கணாம்பாக்கம் போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டாயிரம் விளாகம் கிராம சுடுகாடு அருகே நின்று கொண்டிருந்த இரண்டுபேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர். அந்த நபர்கள் போலீசாரை ஆபாசமாக திட்டி, கத்தியைக்காட்டி கொலைமிரட்டல் விடுத்தனர். அவர்களை மடக்கிப்பிடித்து போலீசார் விசாரித்ததில், அதே கிராமத்தைச் சேர்ந்த கருணாகரன்,28, அன்புசெழியன்,31, எனத்தெரிந்தது.புகாரின் பேரில் துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து இரண்டுபேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை