உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபரிடம் வழிப்பறி இருவர் கைது

வாலிபரிடம் வழிப்பறி இருவர் கைது

நடுவீரப்பட்டு: பைக்கில் வந்தவரிடம் வழிப்பறி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். நடுவீரப்பட்டு அடுத்த பூவன் காலனி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்துரு,24; சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். தற்போது விடுப்பில் வீட்டில் இருந்து வரும் இவர், கடந்த 22 ம் தேதி இரவு 9:30 மணிக்கு தமது பண்ருட்டியிலிருந்து பைக்கில் தங்கை அர்ச்சனாவுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது முத்துநாராயணபுரம், வினோத் முந்திரி கம்பெனி அருகே வரும் போது, அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத இருவர் கத்தியை காட்டி மிரட்டி சந்துருவிடம் இருந்த செல்போன்,பணம் ரூ.2300 வழிபறி செய்து தப்பிச்சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நடுவீரப்பட்டு போலீசார் பாலுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமாக நின்ற பெரியநரிமேட்டை சேர்ந்த தமிழரசன்,25; திருவதிகை ஆஷிம்,27;ஆகிய இருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், சந்துருவை வழிமறித்து செல்போன், பணம் பறித்தது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்ந. மேலும், அவர்கள் வழிப்பறி செய்த பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீது திருட்டு, கஞ்சா வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !