உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோவிலில் திருட்டு 2 பேரிடம் விசாரணை  

கோவிலில் திருட்டு 2 பேரிடம் விசாரணை  

புவனகிரி : புவனகிரி அருகே வள்ளலார் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். புவனகிரி அடுத்த சாத்தப்பாடி, இந்திரா நகரில் வள்ளலா ர் கோவில் உள்ளது. கோவில் நேற்று முன்தினம் இரவு பூட்டப்பட்டது. நேற்று காலை வழக்கம் போல் கோவிலை நிர்வாகத்தினர் திறந்தனர். அப்போது, உண்டியல் உடைக்கப்பட்டு பணம் மற்றும் கண்காணிப்பு கேமராவை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த புவ னகிரி போலீசார் சம்பவ இடத்தில் சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், 2 பேர் பணத்தை திருடிச் சென்றது தெரிந்தது. இது தெடார்பாக 2 பேரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை