மேலும் செய்திகள்
கணவர் மாயம் மனைவி புகார்
24-Jun-2025
வடலுார்: கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்வடலுார் , ஆர்.சி.அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது கூரை வீடு உள்ள பகுதியில் செல்லும் உயர் மின்னழுத்த கம்பியில் தென்னை மரம் உரசி, நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்தது. தீப்பொறி குடிசை வீட்டின் மீது விழுந்து வீடு தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறையினர் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் அருகே வசிக்கும் ஆரோக்கியதாஸின் சகோதரர், பிச்சை பிள்ளை ஆசிர்வாதம் கூரை வீட்டிலும் தீ மளமளவென பரவியது. இதில் இரண்டு கூரை வீடுகளில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் தீயில் எரிந்து சேதமானது. தீவிபத்து குறித்து வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
24-Jun-2025