உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளியில் கரும்பலகை விழுந்து இரண்டு மாணவர்கள் காயம்..

பள்ளியில் கரும்பலகை விழுந்து இரண்டு மாணவர்கள் காயம்..

கடலுார்: வடலுார் அரசு பள்ளியில் கரும்பலகை விழுந்ததில், இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர்.கடலுார் மாவட்டம், வடலுார் புதுநகர், அரசு மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று காலை இப்பள்ளியில் இறை வணக்கம் முடிந்து மாணவர்கள் தங்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.அப்போது, எட்டாம் வகுப்பு 'சி' பிரிவு வகுப்பறையில் இருந்த கரும்பலகை திடீரென விழுந்தது. இதில், வடலுார் வெங்கடகுப்பம் ஆறுமுகம் மகன் சிவகண்டன், 13; பின்னலுார் ராஜவேல் மகன் அபிஷேக், 13; ஆகிய இரு மாணவர்களும் காயம் அடைந்தனர்.உடன், இருமாணவர்களையும் ஆசிரியர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சைக்குப் பின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வடலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ