உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாராயம் விற்ற இருவர் கைது 

சாராயம் விற்ற இருவர் கைது 

பண்ருட்டி: பண்ருட்டி அருகே சாராயம் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி மதுவிலக்கு போலீசார், இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் மேல்குமாரமங்கலம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். பாலம் அருகே வந்த சந்தேகப்படும்படி நின்றிருந்த, 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள், பண்ருட்டி விழமங்கலம் பகுதியைசேர்ந்த  குணசேகரன்,52;  திருத்துறையூர் குயவர் தெருவை சேர்ந்தர்  சிவபூசனம் மகன் விக்னேஷ்,28; என தெரிய வந்தது. மேலும், புதுச்சேரி மாநில சாராயம் பாக்கெட்டுகளை வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. பண்ருட்டி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து, 8 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை