விருத்தாசலம் நகர தி.மு.க., சார்பில் உதயநிதி பிறந்த நாள்
விருத்தாசலம்: விருத்தாசலம் நகர தி,மு.க., சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், ஒன்றிய செயலர்கள் வேல்முருகன், கனக கோவிந்தசாமி, சுரேஷ் முன்னிலை வகித்தனர். அமைச்சர் கணேசன், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, கட்சி கொடியேற்றினார். பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ராமு, அரங்க பாலகிருஷ்ணன், இளைஞரணி பொன் கணேஷ், நகர அவைத்தலைவர் செங்குட்டுவன், நகர துணை செயலாளர் நம்பிராஜன், நகராட்சி கவுன்சிலர் பாண்டியன், அன்பழகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், மாணவரணி அமைப்பாளர் சதீஷ்குமார், வழக்கறிஞர் ரவிச்சந்திரன், ஒன்றிய துணை செயலர் தர்ம மணிவேல், குருசரஸ்வதி, பழனிச்சாமி, இளைஞரணி தளபதி குமார், தளபதி, பிரபாகரன், செந்தில்குமார், மணிவண்ணன், துரை கோவிந்தசாமி, மாரிமுத்து, பாலு, பரந்தாமன், குமார், சிவா, சுந்தரமூர்த்தி, ராஜா, விக்கி, முத்துக்குமார், பாலு, கார்த்திக், இனியராஜ், மணிராஜ், நிஷாந்த், சங்கர், பாலா, தேவா, தினேஷ் பாபுகணேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.