மேலும் செய்திகள்
திருப்பாதிரிப்புலியூரில் 'டிராபிக் ஜாம்'
04-Feb-2025
கடலுார்; கடலுாரில், பாதாள சாக்கடை மேன் ேஹால் சேதமடைந்து கழிவுநீர் வெளியேறுவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.கடலுார் திருப்பாதிரிபுலியூர் நத்தவெளி சாலையில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, சாலையின் நடுவில் பாதாள சாக்கடை மேன் ேஹால் உள்ளது. இந்த மேன் ேஹால் சில தினங்களுக்கு முன் உடைந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. கடலுாரில் முக்கிய ஒருவழிபாதையாக நத்தவெளி சாலை உள்ள நிலையில், அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, பாதாள சாக்கடை மேன் ேஹாலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
04-Feb-2025