உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

நெல்லிக்குப்பம் : அடையாளம் தெரியாத முதியவர் சடலம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளப்பாக்கத்தை சேர்ந்தவர் ரகுராமன். இவர், தனது வயலில் நெல் நடவு செய்துள்ளார். நேற்று காலை நிலத்துக்கு சென்ற போது, வயலின் நடுவே 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்ததை கண்டு ரகுராமன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, வழக்குப் பதிந்து இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி