உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., இந்தியா நிறுவனத்திற்கு மத்திய நிலக்கரி அமைச்சகம் பாராட்டு

என்.எல்.சி., இந்தியா நிறுவனத்திற்கு மத்திய நிலக்கரி அமைச்சகம் பாராட்டு

நெய்வேலி:என்.எல்.சி., இந்தியா நிறுவனம், அறிவுசார் மேம்பாட்டை வளர்க்கும் நோக்கில் புத்தகக் கண்காட்சியை நடத்துவது பாராட்டுக்குறியது என, மத்திய நிலக்கரி அமைச்சக துணைப் பொது இயக்குநர் சந்தோஷ் அகர்வால் பேசினார்.கடலுார் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 11ல் உள்ள லிக்னைட் அரங்கத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியின் 5ம் நாள் நிகழ்ச்சியில் என்.எல்.சி., நிதித்துறை இயக்குநர் பிரசன்னகுமார் ஆச்சார்யா தலைமை தாங்கி பேசுகையில், 'புத்தகங்கள் ஒருவரை இருளில் இருந்து ஒளிக்கு அழைத்து செல்கின்றன.சரியான நேரத்தில் சரியான புத்தகம் படிப்பது வாழ்வில் முன்னேற்றம் அடைய உதவும். புத்தகக் கண்காட்சிகள் மறைந்திருக்கும் திறமைகளை கண்டறிய உதவுகின்றன' என்றார்.முதன்மை விருந்தினர்களாக மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் துணைப் பொது இயக்குநர் சந்தோஷ் அகர்வால், புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம செயலர் மாத்ரி பிரசாத், டில்லி அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் துணைத் தலைவர் கவுதம் சிக்கர்மனே பங்கேற்றனர்.எழுத்தாளர் ரின்னோஸா கிருஷ்ணகுமார், கீழைக்காற்று பதிப்பக பதிப்பாளர் கவுரவிக்கப்பட்டனர். பல்லவி குமார் எழுதிய 'இருசம்மா' என்ற நுாலும், ரத்தின புகழேந்தி எழுதிய 'சம்பூர்ண ராமாயணம்' என்ற நுாலும் வெளியிடப்பட்டன.மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் துணைப் பொது இயக்குநர் சந்தோஷ் அகர்வால் பேசுகையில், 'என்.எல்.சி., இந்தியா நிறுவனம் அறிவுசார் மேம்பாட்டையும், சிந்திக்கும் சமுதாயத்தையும் வளர்க்கும் நோக்கில் புத்தக கண்காட்சியை நடத்துவது பாராட்டுக்குரியது. இது ஒரு வளமான அனுபவமாகும்' என்றார்.கண்காட்சியில் அரங்கு எண் 36ல் நன்மொழி பதிப்பகம் சார்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சிறுவர்களுக்கான புத்தகங்கள் மாணவ, மாணவிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை