உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஐக்கிய விவசாயிகள் முன்னணி பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்

ஐக்கிய விவசாயிகள் முன்னணி பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்

கடலுார்; கடலுாரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை தாங்கினார். மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், விவசாயிகள் சங்கம் மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், மாவட்ட தலைவர் சிவக்குமார் கண்டன உரையாற்றினர். இதில், மத்திய பட்ஜெட்டில் உரங்களுக்கு மானியத்தில் குறைப்பு இல்லை. நுாறு நாள் வேலை திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை எனக்கூறி மத்திய பட்ஜெட்டின் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, துணைத் தலைவர் தட்சணாமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை