மேலும் செய்திகள்
ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கை வாயிற்கூட்டம்
16-Oct-2025
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. பல்கலை அரங்கில் நடந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள் பேராசிரியர் முத்து வேலா யுதம், துரை அசோகன், செல்வராஜ், தனசேகரன், செல்ல பாலு, ஜான் கிருஸ்டி, காயத்திரி, திருஞானம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், 7வது ஊதியக்குழு நிலுவை தொகை மற்றும், முனைவர் பட்ட ஊக்கத்தொகைகள் உடனடியாக வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10ம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டமும், தேர்வு புறக்கணிப்பு போராட்டமும் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
16-Oct-2025