உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நா.த.க., நுாதன போராட்டம்

 நா.த.க., நுாதன போராட்டம்

வி ருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தெப்பல் உற்சவத்தின்போது, பாலக்கரையில் உள்ள அம்மன் குளத்தில் தெப்பல் உற்சவம் நடக்கும். இதற்காக, மணிமுக்தாற்றில் இருந்து நீர்வரத்து வரும் வகையில் பண்டைய காலத்தில் வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. நாளடைவில் ஆக்கிரமிப்பு காரணமாக வடிகால் மூடப்பட்டதால், தண்ணீர் வரத்து தடைபட்டது. இதனால், சமீப காலமாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிகமாக மோட்டார் மூலம் நீர் இறைத்து, குளத்தில் நீர் நிரப்பப்பட்டு வருகிறது. விழா முடிந்த பின் குளத்தில் கோரை புற்கள் மண்டியும், இறைச்சி கழிவுகளை கொட்டியும் பயன்பாடில்லாத நிலைக்கு மாறி விடுகிறது. மேலும், சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு பாட்டில்களை குளத்தில் வீசிவிட்டு செல்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை நிர்வாகி கதிர்காமன் தலைமையிலான அக்கட்சியினர், குளத்தை துார்வாரி, துாய்மையாக பராமரிக்க வேண்டும் என நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபாட்டில்களை சுமந்து, கடைவீதி ரவுண்டானாவில் இருந்து நகராட்சி அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று, அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !