வடலுார் ஜோதி தரிசன ஏற்பாடு விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., ஆய்வு
வடலுார் : வடலுார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசன விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.ஐ.ஜி., பார்வையிட்டார்.கடலுார் மாவட்டம், வடலுார் சத்திய ஞானசபையில், வரும் 11ம் தேதி தைப்பூச ஜோதி தரிசனம் நடக்கிறது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். அதனையொட்டி, மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை. விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷா மித்தல், நேற்று பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.பின், அவர், நிருபர்களிடம் கூறுகையில், 'தைப்பூச ஜோதி தரிசன விழாவில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.குற்றச் செயல்களை தடுக்க 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள், 100 இடங்களில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 8 இடங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவையொட்டி 11ம் தேதி, அதிகாலை 4:00 மணி முதல் இரவு 10:00 வரை தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது' என்றார்.ஆய்வின்போது எஸ்.பி., ஜெயக்குமார், டி.எஸ்.பி., சபியுல்லா, இன்ஸ்பெக்டர் உதயகுமார், சத்திய ஞானசபை செயல் அலுவலர் ராஜா சரவணகுமார் உடனிருந்தனர்.