உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வள்ளலார் ஜெயந்தி விழா

வள்ளலார் ஜெயந்தி விழா

புவனகிரி: புவனகிரி அடுத்த மருதுாரில் பிறந்த வரும் 5ம் தேதி வள்ளலாரின் 203 வது ஜெயந்தி விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு மருதுார் வள்ளலார் கோவில், புவனகிரி வள்ளலார் தயா இல்லம், கிருஷ்ணாபுரம், சொக்கன்கொல்லை வள்ளலார் தெய்வ நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆண்டும் ஜெயந்தி விழாவை விமர்சையாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். அதன் படி வெளியூர் பக்தர்கள் வசதிக்கு ஏற்ப காலையில் இருந்து இரவு வரை அன்னதானம் வழங்கவும், பக்தர்கள் தியானம் செய்யவும் ஏற்பாடுகள் செய்து வருகின் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி