உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கரி மண் கடத்திய வேன் பறிமுதல்

கரி மண் கடத்திய வேன் பறிமுதல்

விருத்தாசலம்: நெய்வேலி கரி மண் கடத்தி வந்த வேனை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை பூதாமூர் சாலையில், வாகன தணிக்கை செய்தனர். அப்போது, அவ்வழியே வந்த டாடா ஏஸ் வேனை மடக்கி சோதனை செய்தபோது, டிரைவர் தப்பியோடினார்.விசாரணையில், நெய்வேலியில் இருந்து கரி மண் கடத்தி வந்தது தெரிந்தது. விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய டிரைவர் மற்றும் வாகன உரிமையாளர் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை