மேலும் செய்திகள்
விதிமீறி கட்டப்பட்ட 140 கட்டடங்களுக்கு 'சீல்'
13-Aug-2025
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பகுதியில் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற இருந்த நிலையில் கவுன்சிலர்கள் எதிர்ப்பால் ஒத்தி வைக்கப்பட்டது. நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் செயல்பட்டு வந்த வைடிபாக்கம், சோழவல்லி பகுதி வி.ஏ.ஓ.அலுவலக கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் இருந்தது. வி.ஏ.ஓ.க்கள் அலுவலகத்தை காலி செய்து தங்களது சொந்த செலவில் வாடகை கட்டடத்தில் தங்கி பணிபுரிகின்றனர். அதனைத் தொடர்ந்து, பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடங்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டது. இதே போன்று முள்ளிகிராம்பட்டில் உள்ள ரேஷன் கடையும் கட்டி முடிக்கப்பட்டு இதுவரை திறக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று இந்த கட்டடங்களை சேர்மன் ஜெயந்தி திறந்து வைக்க இருப்பதாக தெரிவித்திருந்தனர். ஆனால், எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் கட்டபட்டதால் எம்.எல்.ஏ., வேல்முருகன்தான் திறக்க வேண்டுமென சில கவுன்சிலகர்கள் வலியுறுத்தியதால் திறப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டது.
13-Aug-2025