மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம்
21-Jul-2025
கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் வி.சி.,கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர்கள் அறிவுடை நம்பி, செந்தில், மணவாளன், தமிழ்ஒளி, நீதிவள்ளல், திராவிடமணி தலைமை தாங்கினர். பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மண்டல செயலாளர் ராஜ்குமார், மண்டல துணை செயலாளர்கள் பரசு முருகையன், அய்யாயிரம் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
21-Jul-2025