உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி.சி., மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம்

வி.சி., மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் சட்டசபை தொகுதி வி.சி., சிறப்பு செயற்குழு மற்றும் மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.கடலுார் மைய மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சுப்புஜோதி, இளையபெருமாள், ஒன்றிய பொருளாளர் சாத்துக்கூடல் சக்திவேல், துணை செயலாளர் தென்றல், மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் தனராஜ், நிர்வாகி அய்யாதுரை முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் முருகன் வரவேற்றார்.கூட்டத்தில் அரியலுார், பெரம்பலுார் மண்டலங்களின் செயலாளர் அன்பானந்தம், மாநில துணை செயலாளர் கவிஞர் வென்னிலவன், மாநில மகளிரணி துணை செயலாளர் ராஜலட்சுமி, மண்டல துணை செயலாளர் அய்யாயிரம் ஆகியோர் புதிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகளிடம் இருந்து விண்ணப்பம் பெற்றனர். முன்னதாக கட்சியின் செயல்பாடு, தேர்தல் பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது.நகர பொருளாளர் தனசேகர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி