உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இடையூறாக நிற்கும் வாகனங்கள் பயணிகள் கடும் அவதி

இடையூறாக நிற்கும் வாகனங்கள் பயணிகள் கடும் அவதி

பெண்ணாடம்: பெண்ணாடம் பழைய பஸ் ஸ்டாண்டில் இடையூறாக காய்கறிகள் விற்கும் டாடா ஏஸ் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் பஸ் ஏற முடியாமல் பயணிகள் கடும் அவதியடைகின்றனர். விருத்தாசலம் - திட்டக்குடி மார்க்கத்தில் பெண்ணாடம் முக்கிய பகுதியாக உள்ளது. இப்பகுதியில் அரசு, தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், சிமென்ட், சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்களும், விவசாயிகளும் அன்றாட தேவைக்கு, விருத்தாசலம், திட்டக்குடி, கடலுார், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பெண்ணாடம் தான் வரவேண்டும். பஸ் ஸ்டாண்டில் பயணியர் நிழற்குடை அருகில் காய்கறிகள் விற்கும் டாடா ஏஸ் வேன்கள் இடையூறாக வரிசையாக அணிவகுத்து நிற்பதால் பஸ் வந்து, செல்லும் போது பயணிகள் ஏறவும், இறங்கி செல்லவும் முடியாமல் மிகுந்த சிரமம் அடைகின்றனர். குறிப்பாக, பஸ்சில் அவசரமாக ஏறச் செல்லும் முதியோர்கள், பெண்கள், சிறுவர்கள் தவறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, இடையூறாக நிறுத்தப்படும் டாடா ஏஸ் வாகனங்களை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை