கடலுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் துணை சேர்மன், கவுன்சிலர் தர்ணா
கடலுார்; கடலுார் பி.டி.ஓ., அலுவலகத்தில், துணை சேர்மன் மற்றும் கவுன்சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று துணை சேர்மன் அய்யனார், கவுன்சிலர் குருநாதன் ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பி.டி.ஓ., வீரமணியை முற்றுகையிட்டனர். தகவலறிந்த டி.எஸ்.பி., ரூபன்குமார், சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.அப்போது, 4 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. போதிய நிதி இல்லை என டெண்டர் ரத்து செய்யப்பட்டது. அதனால், மீண்டும் தங்களுக்கு டெண்டர் விட்டு நிதி ஒதுக்க வேண்டும் என கூறினர். இதையடுத்து, இருவரையும் பி.டி.ஓ., அறைக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, நிதி வந்தவுடன், வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்குவதாக அதிகாரிகள் கூறினர். இதன்பின், இருவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.