அரிஸ்டோ மழலையர் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
கடலுார் : கடலுார் அரிஸ்டோ ஸ்டார் ஷைன் மழலையர் பள்ளியில் விஜயதசமியையொட்டி, மாணவர்கள் சேர்க்கை நடந்தது.விஜயதசமியையொட்டி பள்ளியில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியை பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம் துவக்கி வைத்தார்.தாளாளர் கஸ்துாரி சொக்கலிங்கம், குழந்தைகளை நெல்மணியில் அ, ஆ எழுத பழக்கும் பணியை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். குழந்தைகள் அடுக்குதல், விரல் அச்சிடுதல், இணைத்தல் போன்ற செயல்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.