கடலுார் கிரீன் டெக் மெட்ரிக் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
கடலுார், : கடலுார் கஸ்டம்ஸ் சாலையில் உள்ள கிரீன் டெக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியையொட்டி மாணவர் சேர்க்கை நடந்தது. குழந்தைகள் மஞ்சள் அரிசியில் அகர எழுத்துகள் எழுதி, வித்யாரம்பம் செய்து பள்ளியில் சேர்க்கப்பட்டனர். பள்ளி தலைவர் ராஜாமணி, தாளாளர் அய்யப்பன், பொருளாளர் ராமலிங்கம், செயலாளர் நஜீமுதின், ஆலோசகர் ஆசைத்தம்பி, இயக்குனர்கள் உபைதுார் ரஹ்மான், செந்தில்குமார், அரவிந்த், கார்மேல் வின்சென்ட், அன்பழகன், தமிழரசி மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.