உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் கள் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு குறைகேட்பு கூட்டம், மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்தவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்ததற்கான காரணம், கோட்ட மாறுதல் தாமதம், அனைத்து வி.ஏ.ஓ., அலுவலகங்களிலும் குடிநீர், கழிவறை, மின்வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. மாவட்ட தலைவர் அலெக்சாண்டர், மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட பொருளாளர் துரைராஜ், கவுரவ தலைவர் செந்தில்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். இதனையேற்று கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !