சேத்தியாத்தோப்பில் கிராம வங்கி திறப்பு
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் வடக்கு மெயின் ரோட்டில் இந்தியன் வங்கி அருகே இடமாற்றம் செய்யப்பட்ட தமிழ்நாடு கிராம வங்கி திறப்பு விழா நடந்தது.சேத்தியாத்தோப்புதெற்கு மெயின்ரோட்டில் இயங்கி வந்த தமிழ்நாடு கிராம வங்கி வடக்கு மெயின்ரோடு இந்திய வங்கி அருகே புதிய கட்டடத்தில் இடமாற்றம் செய்யபட்டது. விழாவில், விழுப்புரம் மண்டல மேலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். சேத்தியாத்தோப்பு வங்கி கிளை மேலாளர் சந்தோஷ் வரவேற்றார்.தொழிலதிபர் மகாலிங்கம், கட்டட உரிமையாளர் சீனிவாசன் ஆகியோர் வங்கி கிளையை திறந்து வைத்தனர்.பிரதமரின் காப்பீடு திட்டத்தின் கீழ் மறைந்த சரண்யாவின் நியமன தாரருக்கு ரூ. 4 லட்சத்திற்கான காசோலை வழங்கினர். இதில், கூளாப்பாடி பாண்டியன், வாழை செல்வராஜ், மற்றும் விவசாயிகள், வாடிக்கையாளர்கள், சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.உதவி மேலாளர் தனுஷ்கோடி நன்றி கூறினார்.