உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நீர்த்தேக்க தொட்டி இடியும் அபாயம் கிராம மக்கள் அச்சம்

நீர்த்தேக்க தொட்டி இடியும் அபாயம் கிராம மக்கள் அச்சம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் கிராம மக்கள் அச்சமடை ந் துள்ளனர். சேத்தியாத்தோப்பு அடுத்த கீரப்பாளையம் ஒன்றியம், பரதுார் கிராமத்தில் 2,000 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு உதவி துவக்கப் பள்ளி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் மூலமாக இக்கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நீர்த்தேக்க தொட்டி 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால், ஆங்காங்கே சிமென்ட் காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. தொட்டி எப்போது, வேண்டுமானலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. கிராம மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். புதிய தொட்டி கட்டித்தரக் கோரிக்கை விடுத்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை என, கிராம மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ