உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுகாதார சீர்கேடு கிராம மக்கள் மனு

சுகாதார சீர்கேடு கிராம மக்கள் மனு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே அரசு வழங்கிய இலவச வீட்டு மனையில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதை கண்டித்து ஆர்.டி.ஓ., விடம் மனு அளிக்கப்பட்டது. விருத்தாசலம் மேட்டுக்காலனி, மகாத்மா காந்தி தெருவில் வசிக்கும் அருந்ததியர் சமூக மக்கள் 184 பேருக்கு, எருமனுார் சாலையில் உள்ள காலியிடத்தில் 2003ல் இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது. இதற்கிடையே, பட்டா வழங்கிய இடத்திற்கு எதிரில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண கோரி பயனாளிகள் வி.சி., மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் தலைமையில் இலவச ஆர்.டி.ஓ., விஷ்ணு பிரியாவிடம் மனு அளித்தனர். நகர செயலாளர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை