மேலும் செய்திகள்
என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
19-Sep-2024
விருத்தாசலம் : உரிய இழப்பீடு வழங்க கோரி, என்.எல்.சி., இரண்டாவது சுரங்கம் முன்பு, கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கம்மாபுரம் பகுதியில் என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப்பணிக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், நிலம், வீடு மற்றும் மனை வழங்கிய விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் உயர் இழப்பீடு, பணம் வாங்காத விவசாயிகளுக்கு குறிப்பிட்ட தொகையை மூன்று மடங்காக உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 22ம் தேதி என்.எல்.சி., அதிகாரிகள் கம்மாபுரம் பகுதியில் உள்ள நிலங்களை சமன் செய்ய முயன்றனர். அப்போது, உரிய இழப்பீடு வழங்க கோரி, கிராம மக்கள் பணியைதடுத்து நிறுத்தினர்.அதைத்தொடர்ந்து நேற்று, உரிய இழப்பீடு வழங்க கோரியும், இழப்பீடு வழங்காமல் நிலத்தை சமன் செய்ய முயற்சிக்கும்என்.எல்.சி., நிர்வாகத்தை கண்டித்தும், என்.எல்,சி.,யால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் கூட்டமைப்பு சங்கத்தினர், கம்மாபுரம் அருகே இரண்டாவது சுரங்கம் பின்புறம் உள்ள கேட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
19-Sep-2024