உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மினி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை தேவை: விருத்தாசலம் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மினி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை தேவை: விருத்தாசலம் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

விருத்தாசலம் கொளஞ்சி யப்பர் அரசு கலைக் கல் லுாரி வளாகத்தில் உள்ள மினி விளையாட்டு மைதானம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், கடந்த 10 ஆண்டுகளுக் கு முன் துவங்கப்பட்டது. இதில் ஓட்ட பந்தயம், கால்பந்து, வாலிபால், பேட் மிட்டன், ெஷட்டில் உள்ளிட்ட பலவிதமான ஆடுகளங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளது. 400 மீட்டர் தொலைவிற்கு ஓட்டம், நடைபயிற்சி மேற்கொள்ள ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடை பாதையில் விருத்தாசலம் நகரத்தில் உள்ள முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் தினசரி நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.மேலும், ஏழை, எளிய கிராமப்புற இளைஞர்கள், போலீஸ், ராணுவம் உள்ளிட்ட உடற்தகுதி தேர்வுகளுக்கு, இந்த மைதானத்திற்கு வந்து பயிற்சி மேற்கொள்கின்றனர். ஆனால் கடந்த ஓராண்டு க்கும் மேலாக மைதானம் பராமரிப்பின்றி உள்ளதால், ஓடுதளம் இருந்த தடமே தெரியாமல் புதர்மண்டி உள்ளது., மழைக்காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், மைதானத்தில் ஆங்காங்கே மண் அரிப்பு ஏற்பட்டு, ஓடுபாதை கு ண்டும் குழியுமாக உள்ளது. பள்ளி, கல்லுாரி அளவில் மாவட்ட, மண்டல, மாநில போட்டிகளும் அவ்வப்போது இந்த விளையாட்டரங்கில் நடக்கும்.விளையாட்டரங்கம் முழுவதும் புதர் மண்டி உள்ளதால் விஷ ஜந்துக்களின் கூடாரமாக மைதானம் மாறி உள்ளது. இதனால், மைதானத்திற்கு வரும் பொதுமக்கள் அச்சமடைகின் றனர். இதனால் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என நினைக்கும் ஏழை, எளிய மாணவர்கள், இளைஞர்களின் கனவு, கானல் நீரமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, புதர் மண்டி கிடக்கும் மினி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விரைந்து நடவடக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ