உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தமிழில் அர்ச்சனை செய்ய கோரி விருத்தாசலம் கோவிலில் முற்றுகை

தமிழில் அர்ச்சனை செய்ய கோரி விருத்தாசலம் கோவிலில் முற்றுகை

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யக் கோரி, பக்தர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், விருத்தாசலம் கம்பர் தெருவை சேர்ந்த ராமையா, 70, என்பவர் நேற்று காலை 10:00 மணியளவில் பக்தர்கள் சிலருடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அவரிடம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் சமாதானம் செய்தனர்.அப்போது, நான் இரண்டு முறை அறங்காவலராக இருந்துள்ளேன். தினசரி கோவிலுக்கு வரும்போது தமிழில் அர்ச்சனை செய்யுமாறு கூறியதற்கு, அங்கிருந்த அர்ச்சகர், சரிவர பதில் கூறாமல் அலட்சியமாக பதில் தெரிவித்தார்.தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என போர்டை மட்டும் மாட்டியிருந்தால் போதுமா என கேள்வி எழுப்பினார். எனவே, தமிழில் அர்ச்சனை செய்யவும், அதனை உறுதிப்படுத்தவும் வேண்டும் என்றார்.இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !